×

வருமான வரித்துறை அதிகாரி வீட்டில் 70 சவரன் கொள்ளை: மிளகாய் பொடி தூவி தப்பினர்

தொண்டாமுத்தூர்: கோவை வடவள்ளி- தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள சக்தி நகரை சேர்ந்தவர் கண்ணன். இவர், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட வருமான வரித்துறை துணை கமிஷனராக பணியாற்றி வருகிறார். இவர் குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றுவிட்டார். நேற்று காலை கண்ணனின் வீடு திறந்து கிடப்பதை பார்த்த பக்கத்து வீட்டினர் உடனடியாக கண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். இதுசம்பந்தமாக கண்ணன் அளித்த புகாரின்படி, வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை தலைமையில் போலீசார் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்து 70 பவுன் நகைகள் கொள்ளைப்போனது தெரிய வந்தது.

கொள்ளையர்கள் வீட்டில் மிளகாய் பொடி தூவி சென்றதும் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவின் சர்வரை திருடி சென்றதும் தெரிவந்துள்ளது. போலீசார் வீட்டின் தெருவில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, வீட்டில் உள்ள தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post வருமான வரித்துறை அதிகாரி வீட்டில் 70 சவரன் கொள்ளை: மிளகாய் பொடி தூவி தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Thondamuthur ,Kannan ,Shakti City ,Dodamuthur ,Vadavalli, Govai ,Kerala State Palakkad District ,Dinakaran ,
× RELATED அமோக வெற்றியை தந்த தேக்கு மிளகு கூட்டணி: சாதித்த பெண் விவசாயி நாகரத்தினம்!